தொண்டியில் மீண்டும் துவங்கியது அழகப்பா பல்கலைக்கழகம் மாலை நேரக் கல்லூரி

தொண்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மாலை நேர கல்லூரி மீண்டும் இந்த ஆண்டு 2024 இணைய வழி விண்ணப்பங்கள் துவங்கி உள்ளது... இதன் மூலம்  பயன்பெற விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 மீண்டும் துவங்கிய மாலை நேர கல்லூரி 
 கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டு வந்த மாலை நேர கல்லூரி மாணவர் சேர்க்கை குறைவாக இருந்ததின் காரணமாக கல்லூரி மூடப்பட்டது. மேலும் தொண்டி மட்டும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து இந்த கல்லூரியில் படிக்க முயற்சி செய்த  ஏலே ஏலே சாமானிய மக்களின் பிள்ளைகள் செலவு செய்து வெளியில் சென்று படிப்பதற்கு வாய்ப்பு இல்லாத மக்கள் இந்தக் கல்லூரி பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கல்லூரி மூடப்பட்டதன் காரணமாக சாமானிய மக்களின் கல்வித் தரம் பனிரெண்டாம் வகுப்பு முடிவடைய இருந்தது  நிலையில்தான் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு  தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் இதில் தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்கம் சார்பில் மிகுந்த பங்களிப்பு ஆற்றப்பட்டது..

 இப்போது பல்வேறு முயற்சிகளுக்கு இடையில்  மீண்டும் தொண்டியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மாலை நேர கல்லூரி துவங்கியுள்ளது..
 உண்மையில் சகோதரர் SMB சுலைமான்,   நவ்பல், பேராசிரியர் ரவி, நாகு, ஹிப்பத்துரகுமான் , சகுபர் மற்றும் தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்கத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக

 நன்றி 
அன்புடன் மக்கள்தொண்டன்....

 ஆன்லைன் விண்ணப்பம் லிங்கை பெற https://admissions.alagappauniversity.ac.in/thondi_admission//modules/registration/registrationForm.php?type=UG

Comments