தொண்டி ஊராட்சி ஒன்றிய மேற்குப்பள்ளிக்கு மாநிலத்தின் சிறந்தபள்ளிக்கான விருது !
ஒருதலைமைஆசிரியையின் சீரியமுயற்சியால் சாமானிய ஏழைமாணவர்களுக்கு நல்லகல்வி,சுகாதாரமானபாடசாலை,தூய்மையான கழிப்பிடம் என்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது நமது தொண்டி ஊராட்சி ஒன்றிய மேற்குப்பள்ளி அது நாம் அனைவரும் பெருமைப்படும் நிகழ்வாக உள்ளது.அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு நோக்கம் கொண்ட தலைமை ஆசிரியை சாந்தி அவர்களுக்குமுயற்ச்சியை பாராட்டி தமிழகத்தின் சிறந்தபள்ளிக்கான புரொஸ்கார் விருது வருகின்ற 22-9-2017அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் வழங்கப்படஉள்ளது. தன் உழைப்பால் முயற்சியால் இறைவன் என்னை கண்ணியப்படுத்துகிறான் என்று அடக்கமாக கூறிக்கொள்ளும் தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் அவர்களை நாம் அனைவரும் பாராட்டுவோம் .அவருடைய உழைப்பால் தொண்டியே பெருமைகொள்கிறது தலைமைஆசிரியை சாந்தி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி !
அன்புடன் மக்கள் தொண்டன் பாயிஸ் ''''

Comments
Post a Comment